ஞாயிறு, 28 நவம்பர், 2010

வெட்டியாக கழித்த நாட்கள்


3.11.2010 அன்று காலையில் இருந்து மிகவும் சந்தோஷம். ஏனென்றால், அன்று மாலை வீட்டிற்கு அனுப்புகிறார்கள் . தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை. அன்னைக்கு காலையிலேயே எல்லாம் எடுத்து வைக்கலாம்ன்னு நினச்சேன். சரி நாம ஆறு மணிக்கு தான போவோம் என்று விட்டுவிட்டேன். அப்புறம் காலைல சாப்பிட்டு விட்டு கிளாஸ் க்கு சென்றால் முதல் பாட வேளை அறிவியல். டெஸ்ட் வேற சொல்லி இருந்தாங்க. என்ன பண்றதுன்னு தெரியல. 2.4.2010 அன்னைக்கு சாயங்காலம் படிக்கல. வீட்டுக்கு போற குஷி தான். அப்புறம் முதல் period மிஸ் வந்தாங்க. நாம செத்துட்டோம் ன்னு நினச்சேன். இத்தனைக்கும் 1 பாடம் தான் டெஸ்ட். திடீர்ன்னு மிஸ் இப்போ படிங்க. last period டெஸ்ட் எழுதுங்கன்னு சொன்னாங்க. அந்த பாடம் படிச்சதுதான் ஆனாலும் test ன்னு சொன்னதால பயம் வந்துடுச்சு. எப்படியோ அந்த 1st period படிச்சிக்கிட்டே ஓடிடுச்சி. எப்படியோ அடுத்த period ல கணக்கு சார் sum தான் நடத்துவார் என்ற தைரியத்துல ஜாலியா இருந்தேன். நினச்ச மாதிரியே சார் sum தான் நடத்தினாரு. அந்த period எப்படியோ போச்சு.

அப்புறம் break எல்லார்க்கிட்டையும் சிரிச்சி பேசி அதுவும் முடிந்துவிட்டது. மூன்றாவது period ஆரம்பித்தது. test எழுதணும் ஏற்கனவே படித்தது தான் அதனால எப்படியோ எழுதிட்டேன். நாலாவது period english படிக்க சொன்னாங்க. அப்பாடான்னு பெருமூச்சு விட்டேன்.

அப்புறம் அதான் நம்ம period வந்தது. அதான் சாப்பாடு period. சாப்பாடு உள்ள இறங்கவே இல்ல. இருந்தாலும் சாப்பாட்டுக்கு நாம தானே காசு கட்டுறோம் ன்னு நினச்சி கொஞ்சம் சாப்பிட்டேன்.

அப்புறம் தமிழ் பாடவேளை வந்தது. தமிழ் தானே எல்லாம் படிச்சாச்சு. எது கொடுத்தாலும் எழுதலாம் ன்னு விட்டுட்டேன். test எழுதியும் விட்டுட்டேன். ஆறாவது period english படிச்சோம். அப்புறம் ஒரு பாடம் full test சொன்ன science period வந்தது. முகத்துல இருந்த சந்தோஷம் எல்லாமே போச்சு. ஒரு periodனாலே மயக்கம் வரும் ஏழு, எட்டு தொடர்ந்து 2 period தாங்கமுடியுமா ன்னு நினச்சேன். மிஸ் வந்தாங்க. கிளாஸ் அமைதியா இருந்தது. வந்த உடனே நோட் எடுங்க question சொல்றேன் எல்லோரும் புக்க பைல போடுங்க ன்னு சொன்னாங்க. அப்புறம் நோட் எடுத்தோம். மிஸ் question சொன்னாங்க. நான் எல்லாமே படிச்சிட்டு தான் போனேன். ஆனா எல்லாமே மறந்து போன மாதிரி இருந்தது. சரி நாம பார்க்காத testடான்னு நான் பாட்டுக்கு எல்லாமே தெரிஞ்சவ மாதிரி எழுதிட்டு இருந்தேன். மிஸ் வேற என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. சரி ன்னு விட்டுட்டேன். அப்புறம் நாலு மணி ஆச்சு விடுதி மாணவர்கள் கிளம்பலாம் ன்னு சொன்னாங்க. எங்க மிஸ் தான் ரொம்ப நல்லவங்களாச்சே நீங்க மட்டும் ஒரு கேள்வி எழுதி காட்டிட்டு போலாம் ன்னு சொன்னாங்க.

மொத்தமா ஐந்து மதிப்பெண் வினாக்கள் நான்கு கொடுத்து இருந்தாங்க. அந்த நாலுமே எனக்கு தெரியும். எல்லாத்துலயும் பாதி பாதி எழுதி வெச்சிட்டு இருந்தேன். மிஸ், கொண்டு வாங்க ரெண்டு period டா ஒண்ணுமே எழுதலையான்னு கேட்டாங்க எங்க கிளாஸ் ல மூன்று பேர் ஹாஸ்டல். மூன்று பேருமே கொண்டு போனோம். அதுல ரெண்டு பேர் நோட்டும் திருத்திட்டாங்க. லாஸ்ட் நோட் என்னுடையது. எனக்கு இந்த ஒரு நாள் வராதா வராதா ன்னு நினைச்சது ரொம்ப தப்பா போச்சே இப்படி வந்து மாட்டிக்கிட்டமே ன்னு நினச்சேன். மிஸ் திருத்திட்டாங்க. நாலு கேள்வியும் மூன்று பெரும் home test எழுதிட்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்பாடா ன்னு சந்தோசப்பட்டேன்.
அப்புறம் பிரண்ட்ஸ் கூட வீட்டுக்கு வந்தேன். வந்த உடனே பை ஒரு பக்கம், செருப்பு ஒரு பக்கம் போட்டுட்டு உள்ள வந்தேன். வீட்டுக்கு வந்துட்டோம் ன்னு சந்தோசமா இருந்தது. அம்மா எப்படி இருக்க? ஏன் இளச்சிட்ட ன்னு கேட்டாங்க. அப்புறம் சிக்கன் எடுத்துட்டு வந்தாங்க. அக்கா எனக்கு சமைத்துக் கொடுத்தா.அன்னைக்கு இரவு வீட்டு சாப்பாடு சாப்பிட்டேன். அப்புறம் என்ன டிவி தான், சிஸ்டம் தான். ஸ்கூலா இருந்தா ஒவ்வொரு period ம் ஒரு வருஷம் மாதிரி போகும். ஆனா வீட்டுக்கு வந்துட்டா இப்ப தான் வந்த மாதிரி இருக்கும் அதுக்குள்ளே விடிஞ்சிடும். அம்மா ஏதாவது கட்டுரை எழுது எழுது ன்னு சொல்வாங்க. நிறைய புத்தகங்கள் எனக்காக வாங்க வெச்சி இருந்தாங்க நான் படிப்பேன் ன்னு. ஆனா நான் படிக்கல டிவி தான் கதி ன்னு இருந்துட்டேன்.

4.11.2010 காலை எட்டு மன்னிக்கு எழுந்தேன். எழுந்ததும் டிவி போட்டேன். பட்டு மணி இருக்கும் என் firend கவிதா போன் பண்ணி பேசினா. அவ கிட்ட பேசிட்டு கம்ப்யூட்டர்ல கேம் விளையாடினேன். அன்னைக்கும் சிக்கன் தான் எடுத்தாங்க. என்கூட ஒன்பதாவது படிச்ச சௌந்தர்யா போன் பண்ணி பேசினா. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கம். எனா அவ என் சைஸ்ல இருப்பா. அவ கிட்ட பேசினது சந்தோசமா இருந்தது.

5.11.2010 தீவாவளி - அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு எழுந்தேன். அன்னைக்கு சிக்கன் பிரியாணி. நான் உருப்படியா ஒன்றுமே பண்ணல. வீட்டுல படிக்கலாம் ன்னு பாட புத்தகம் எடுத்துட்டு வந்தேன். ஆனா இந்த டிவி, கம்ப்யூட்டர் என்ன கெடுத்துடுச்சி. அன்னைக்கு மாலை மைனா படத்துக்கு போனோம்.

அடுத்த நாள் (6.11.2010) விடிந்தது அன்னைல இருந்து எனக்கு பயம் வர ஆரம்பிச்சது. ஐயோ இன்னும் ஸ்கூல் க்கு போக ஒரு நாள் தான் தானே இருக்கு ன்னு பயம் வர ஆரம்பிச்சது. இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா நான் ஸ்கூல் க்கு போற அன்னைக்கு (8.11.2010) இரண்டாம் இடைத் தேர்வு. நான் இங்க படிக்கலாம் ன்னு நினைப்பேன் இன்னும் மூன்று நாள் இருக்கு ரெண்டு நாள் இருக்கு, இன்னும் ஒரு நாள் இருக்கு ன்னு ஓட்டி ஓட்டி கடைசியா ஏழாம் தேதியும் வந்தது. நாளைக்கு ஸ்கூல் அதுவும் தேர்வு வேற இருக்கு. அன்னைக்கு எங்க வீட்டுல சிக்கன் இல்ல , கீரை தான். சாப்பாடே இறங்கல. கஷ்டமா இருந்தது. எங்க ஹாஸ்டல் கண்ணு முன்னாடி வந்து வந்து போய்க்கிட்டே இருந்தது. கொஞ்ச கொஞ்சமா மகிழ்ச்சி போய் துன்பம் என்ன நெருங்கிக்கிட்டே இருந்தது. அன்று மாலை மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு லீவ் என்று நியூஸ் ஓடிட்டு இருந்தது. நம்ம ஊர் பேர் வராதான்னு டிவியையே ஏக்கமா பார்த்துட்டே இருந்தேன். அம்மாவையும் அக்காவையும் நம்ம ஊர்ல லீவ் விடமாட்டான்களா ன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். எனக்கு துக்கம் தொண்டைய அடிச்சது. என்னால ஒண்ணுமே செய்ய முடியல.

நாளைக்கு ஸ்கூல் க்கு போறோம் ன்னு தெரிஞ்சும் நான் கம்ப்யூட்டர்ல கேம் தான் விளையாடிட்டு இருந்தேன். நான் ரொம்ப நொந்து போய்டேன். கீழ் வீட்டில் இருக்கும் தாத்தாவை பார்க்க சென்ற அக்கா கத்திக் கிட்டே மேல வந்தா என்னன்னு கேட்டதுக்கு மழை காரணமா நாளைக்கு சேலத்துல இருக்குற எல்லா ஸ்கூல் க்கும் லீவ் ன்னு சொன்னா. நான் மற்ற friends க்கு போன் பண்ணி தகவல் சொன்னேன். முக்கியமான விஷயம் நாலாந்தேதி, ஐந்தாம்தேதி, ஆறாம்தேதி படிக்காத நான் ஏழாம் தேதி படிச்சேன். அது ஒன்னு தான் கவலையா இருந்தது. ஏனா நான் படிச்சேன் ஆனா எட்டாம் தேதி லீவ் விட்டுட்டாங்க. எட்டாம் தேதி லீவ் ன்னு சொல்லி இருந்தா அன்னைக்கே படிச்சி இருக்கலாம். அப்புறம் நான் என் மனச தேத்திக்கிட்டேன் தமிழ் தான படிச்சோம் ன்னு.

அடுத்த நாள் எத்தாம் தேதி அம்மா வெண்டைக்காய் குழம்பு வெச்சாங்க. அப்புறம் மத்தியானம் கொஞ்சம் படிச்சேன். ஏனா அன்னைக்கு அக்கா வீட்டுல இல்ல. அவளுக்கு அன்று காலேஜ் இருந்தது. அப்புறம் அன்று இரவு அம்மா எனக்கு பரோட்டா பிடிக்கும் ன்னு வாங்கிட்டு வந்தாங்க. ஆனா அன்னைக்கு எனக்கு பரோட்டா பிடிக்கல (ஏனா அடுத்த நாள் ஸ்கூல்) பரோட்டா சாப்பிட்டு இருக்கும் போது கண்ணுல கண்ணுதண்ணி நின்னுச்சி. அம்மா மனசு கஷ்டப்படக்கூடாது ன்னு நான் அழல. அம்மா கிட்ட கேட்டுக் கிட்டே இருந்தேன் நாளைக்கு ஸ்கூலா ஸ்கூலான்னு அக்காகிட்டையும் கேட்டேன் ஆமாடின்னு சொன்னா. அன்று இரவு அம்மாகூடையே படுத்துக்கிட்டேன். இரவு முழுக்க அழுகை வந்துகிட்டே இருந்தது. அப்புறம் அடுத்த நாள் காலைல ஐந்துஅரை மணிக்கு எழுந்தேன் விடிஞ்சிடுச்சி வெளில போய் பார்த்தேன். மழை வராதா?, லீவ் விட மாட்டாங்களான்னு. இன்னைக்கும் அந்த ஜல் புயல் வந்தா நல்ல இருக்குமே ன்னு நினச்சேன். இல்லனா எல்லா ஸ்கூலையும் இடிச்சா நல்லா இருக்கும் நினச்சேன். நானே ஸ்கூல இடிச்சிடலாம்ன்னு கூட ஆசைப்பட்டேன். ஊர்ல இருக்குற அக்கா போன் பண்ணி பேசினாங்க. எனக்கு அழுகையே வந்துடுச்சி. அழுதேன் அழுதேன் அழுது தீர்த்தேன். அப்புறம் ஸ்கூல் க்கு போக ரெடி ஆனேன். அக்கா நேற்று அம்மா வாங்கி வந்த பரோட்டாவ கொத்து பரோட்டாவா முட்டைஎல்லாம் போட்டு செய்துக் கொடுத்தா. என்னால சாப்பிட முடியல. மறுபடியும் எப்ப வீட்டுக்கு வருவேன் ன்னு அம்மாகிட்ட கேட்டேன். அரையாண்டு விடுமுறை டிசம்பர் கடைசி வாரம் விடுவாங்க ன்னு சொன்னாங்க. என்ன என்னாலேயே அடக்க முடியல. மனசே இல்லாம கிளம்பினேன். என் மாமா தான் என்ன பஸ் எற்றிவிட்டார். நான் மீண்டும் இந்த மாதிரி நான்கு நாட்கள் விடுமுறை வருமான்னு ஏங்கிக் கொண்டே பஸ் ஏறினேன். பஸ் எடுத்தாங்க. பஸ் போக போக நாம இந்த ஐந்து நாள் லீவ்ல என்ன உருப்படியா பண்ணினோம் ன்னு நினைச்சிட்டே போனேன். காட்சி வலைதளத்தில் சில கதைகள் படித்தேன். வேற ஒண்ணுமே உருப்படியா பண்ணல. பஸ் ஸ்கூல நெருங்கிக் கிட்டே இருந்தது. என் மனம் பதறிக் கொண்டே இருந்தது.

நான் என்னைக்குமே வீட்டுல இருந்து வரும் போது கவலையா வந்தது இல்ல. சரி இன்னும் ரெண்டு வருஷம் தான். அதுக்கப்புறம் அம்மாகூட தான இருப்போம் ன்னு நினைச்சிக்கிட்டேன். திரும்பவும் இந்த பஸ்ல எப்போ சேலம் வருவோம் ன்னு நினைக்கும் போது விசில் அடித்தது. பஸ்ஸை விட்டு பிரியாமல் பிரிந்து பள்ளியில் உள்ள விடுதிக்கு சென்றேன் அரையாண்டு விடுமுறை எப்போ வருமென்று....


வெள்ளி, 15 ஜனவரி, 2010

என் அரையாண்டு விடுமுறை அனுபவங்கள் ....

(என் அரையாண்டு விடுமுறை 24.12.2009 - 3.1.2010 வரை )

23. 12. 2009 அன்று மாலை ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்தேன். அக்காவைப் பார்த்ததும் ஒரே சந்தோசம் . நான் வந்தாலே அவளுக்கு பயம் வந்துவிடும். ஏன்னென்றால் நான் அவளை அடித்துக்கொண்டே இருப்பேன். அன்று இரவு டிவி பார்த்து பொழுதை கழித்தேன் . அன்று மட்டும் அல்ல, என்னைக்கும் எனக்கு டிவி தான் ஏன்னா ஹாஸ்டல்ல டிவி இல்ல. ஒரு பாட்டுக் கூட கேட்க முடியாது. அம்மா என்னை பார்க்க வந்தால் அவங்க செல்போன்ல பாட்டு கேட்பேன் நல்ல பாட்டா செல் போன்ல ஏத்திகிட்டு வர சொல்லுவேன். அதனால தான் வீட்டுக்கு வந்த உடன் டிவி பார்க்கிறேன். எனக்கு எழுதும் ஆர்வம் முன்பு இருந்தது. கொஞ்ச வருஷம் டிவி பார்த்தே பொழுத கழிச்ச்சதனால எழுதும் ஆர்வம் குறைந்தது. ஆனால் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க எழுது சொர்ணான்னு. இப்பவும் அப்படித்தான் சொன்னாங்க எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலன்னு சொன்னேன். அரையாண்டு விடுமுறைல நீ என்னன்னா செஞ்சன்னு எழுதிவைன்னு சொன்னாங்க.

என்னடா இது ஜாலியா இருக்கலாம்னு வீட்டுக்கு வந்தா அம்மா எழுத சொல்றாங்கலேன்னு கஷ்டமா போச்சு. இதுக்கு முன்னாடி நான் எழுதன கட்டுரையெல்லாம் அம்மா ஆர்வமா படிப்பாங்க . என் எழுத்துக்கள் என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .நான் நல்லா எழுதுவேன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லுவாங்க ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே ) இப்பக்கூட அம்மா எழுத சொல்றாங்கன்னு தான் கிறுக்குறேன்.

இன்னிக்கு எழுதுறேன், நாளைக்கு எழுதுறேன்னு அம்மாவ ஏமாத்தி ஏமாத்தி எனக்கு வேண்டியது வாங்கிக்குவேன். அம்மாவும் புள்ள எழுத போறான்னு நான் கேட்டத எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. எனக்கு எழுதணும்ன்னு ஆசைதான் டிவி , கம்ப்யூட்டர் இருக்கும் போது எழுத மனசு வருமா ? அதையே தான பாக்கணும்ன்னு தோணும். நீங்களே சொல்லுங்க.

ஆனாலும் அரையாண்டு விடுமுறையில் வைக்கம் முகமது பஷீர் எழுதிய "இளம் பருவத்து தோழி'' யை படித்தேன். ( இந்த கதையைப் பற்றி இன்னொருக் கட்டுரையில் சொல்கிறேன் ) ஜெயகாந்தன் எழுதிய 3 சிறுகதைகள் படித்தேன்.
1. அக்னி பிரவேசம்
2. நந்தவனத்தில் ஒரு ஆண்டி
3. அந்தரங்கம் புனிதமானது
மீதி கதைகளை பொங்கல் விடுமுறையில் படித்து விடவேண்டும்.

24.12.2009 அன்று எங்கள் ஊர் அருகே உள்ள தாதம்பட்டிக்கு அம்மா, அக்காவுடன் சென்றேன். அன்று ''பெரியார்'' நினைவு நாள் தாதம்பட்டியில் தான் பெரியாரின் பாட்டி வீடு இருந்தது. அவர் மனைவி நாகம்மை அம்மாவின் வீடும் அங்கு தான் இருந்தது. இப்போது பெரியாரின் சில உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்தோம். தாதம்பட்டியில் தான் பெரியார் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டி சாய்த்தார்.
( பெரியார் - அஜயன்பாலா பக். 50 )
இது அரையாண்டு விடுமுறையில் கிடைத்த முதல் அனுபவம் .

26.12.2009 அன்று மேச்சேரி அருகே ஏர்வாடி என்ற கிராமத்தில் நடந்த கலை விழாவிற்கு நான், என் அம்மா, அக்கா மூவரும் சென்றோம். முனைவர் கே. ஏ. குணசேகரன் , எடிட்டர் லெனின், நாஞ்சில் நாடன் போன்றோர் எல்லாம் வந்து இருந்தார்கள் . அங்குதான் நான் என் வாழ்கையில் முதல் முதலாக
பொம்மலாட்டத்தையும், தெரு கூத்தையும் கண்டு ரசித்தேன். அந்நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஈழத்து தமிழ் சகோதிரிகள் இருவரை அங்கு சந்தித்தேன். நண்பர்களாகிவிட்டோம் . அரையாண்டு விடுமுறையில் இது இரண்டாவது அனுபவம்.

அம்மாகிட்ட வேட்டைக்காரன் படத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். அதுக்கு அம்மா உன் புத்தி ஏன் இப்படி போகுது உனக்கு ரசனையே இல்லன்னு திட்டினாங்க. சி.டியாச்சும் வாங்க காசு குடுங்கன்னு கெஞ்சி கூத்தாடி சி.டி வாங்கி பார்த்தேன். படம் பார்த்த பின்னாடி தான் அம்மா சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சது .

டிவி இல்லனா கம்ப்யூட்டர் - ரெண்டையும் அம்மா ஆப் பண்ணிட்டாங்கனா செல்போன் ல பாட்டு கேட்பேன். அது இல்லன இது ஏதாவது ஒரு சவுண்ட் வீட்ல கேட்டுகிட்டே இருக்கணுமான்னு அம்மா சத்தம் போடுவாங்க.

இதுமேல எங்க தாத்தா எப்பபார்த்தாலும் டிவி பார்க்கறதும் , நெட்ட நெட்டுக்கிட்டு பார்க்கறதும் வேலையா போச்சின்னு திட்டுவாரு. ஹாஸ்டல்ல நிம்மதி இல்லாம வீட்டுக்கு வந்தா வீட்லயும் நிம்மதி இல்ல. அத பண்ணாத இத பண்ணாதன்னு சொல்றாங்க அரையாண்டு லீவ்ல நான் ஒரு படத்துக்குக்கூட தியேட்டர்க்கு போகல தெரியுமா.

அய்யய்யோ ............ முக்கியமான ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டேனே. அரையாண்டு கேள்வி பதில எழுத்திட்டு வர சொன்னாங்க . புக்கே தொடாம லீவ்ல ஜாலியா இருக்கலாம்னா இத வேற எழுதணும். அதுல பாதி நல்ல வேல நான் ஹாஸ்டல்ல எழுதிட்டேன். இன்னும் பாதி இருந்தது எப்படியோ அந்த கொடுமையும் எழுதி முடிச்சிட்டேன்.

இப்ப அம்மாக்காக இந்த கட்டுரைய எழுதுறேன். கண்ணமூடி கண்ண திறக்கறதுக்குள்ள 10 நாள் லீவ் போய்டுச்சி. ஒவ்வொரு நாளும் ராத்திரி படுக்கும் போது இன்னும் 5 நாள் தான் இருக்கு , 4 நாளு , 2 நாளுதான் இருக்குன்னு வேதனையோடு தான் தூங்குவேன். நான் எதிர்ப் பார்த்த அந்த பயங்கரமான நாள் வந்தது. ஆமாம் 4 லாம் தேதி வந்துடுச்சி. அதுக்குள்ளே எப்படி வந்துச்சினே தெரில. 3 ஆம் தேதி நெனச்சேன் 4 லாம் தேதி வரவே கூடாதுன்னு. ஆனா வந்துருச்சே என்ன செய்ய பள்ளிக்கூடத்துக்கு போகணுமே கெளம்பிட்டேன் சோகத்தோட.

எந்த சந்தோசமும் அனுபவிக்கல . அதுக்கு மேல ஒரு வருத்தம் . ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தேன் தெரியுமா

அரையாண்டு லீவ் எப்படி போச்சுன்னு அம்மா எழுத சொன்னாங்கல்ல. அத சொல்ல ஒன்னும் இல்ல . எப்படியோ அம்மாவோட ஆசைய பொங்கல் லீவ்ல நிறைவேத்திட்டேன். 4 லாம் தேதி அம்மா என்னை பஸ் ஏத்தும் போது சொன்னாங்க. அரையாண்டு பேப்பர் கொடுப்பாங்க சொர்ணா. மார்க் கம்மியா இருந்தா வருத்தப்படாத நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அடுத்த பரிச்சைல அதிகமா மார்க் எடுத்துரலாம் ன்னு சொன்னாங்க.

நான் அம்மாவிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன் . அத வருத்தப்படுரவங்கக்கிட்ட சொல்லுங்க. நானாவது வருத்தப்படுரதாவது !!!
கணக்குல 36 மார்க். இவ்வளவு எப்படி எடுத்தேன்னு எனக்கே தெரில. 80 , 85 , 90 மார்க் எடுத்த பிள்ளைங்க எல்லாம் அழுவுது. நான் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருந்தேன் ஏன்னா................. நான் பாஸ் ஆய்ட்டேன். அடுத்த பரிச்சைல நான் எப்படியும் 40 மார்க் எடுத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

கணக்கு பாடத்த பாடத்திட்டத்துல இருந்து எடுத்துடனும். எல்லா பாடத்துலயும் 80 மார்க்குக்கு மேலதான் எடுப்பேன். இந்த வீணாபோன கணக்குல 40 எடுக்குறதே கஷ்டமா இருக்கு. ஆமாம் உங்களுக்கு .............................????????

அனைவருக்கும் ஏன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .வியாழன், 14 ஜனவரி, 2010

என் அக்கா


என் அக்கா 8.1.2006 - 10.1.2006 வரை கைடு கேம்ப் பொய் இருந்தாள் . அக்கா இல்லாமல் எட்டாம் தேதி அன்று நான் தூங்கவில்லை. அக்கா எப்போது வருவாள் என்று அம்மாவிடம் கேட்டேன் அம்மா 10 ஆம் தேதி அன்று வருவாள் என்று சொன்னாங்க. அக்கா இல்லாமல் சிறிது நேரம் கூட உறங்கவில்லை. எப்ப நான் தூங்கனேன்னு எனக்கு தெரில தூங்கிட்டேன் . அதே நேரம் என் அக்கா என்கூட இருந்தா உடனே தூங்கிடுவேன். என் அக்கா என்கூட இருந்தா அவள நோண்டிக்கிட்டே இருப்பேன். என் அக்கா என்னைத் திட்டுவதற்கு ஒரு வார்த்தைக் கண்டுபிடித்து இருந்தாள் . அது என்னன்னு சொல்றேன் கேளுங்க

ஒரு தடவை நான் அவளை நோண்டினால் ஏய் .. என்று சொல்லுவாள் . இரண்டாவது முறை நோண்டினால் ஏய் ................. என்று இழுப்பாள். மூன்றாவது முறை நோண்டினால் அம்மா பாருமா என்று தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை எழுப்புவாள். அதற்கு என் அம்மா நீ ஆச்சி , அவளாச்சி என்று கூறுவாள். இன்னொரு முறை நோண்டினால் ஏய் சனியனே .... என்று திட்டுவாள். எப்படியோ சண்ட போட்டுட்டே தூங்கிவிடுவோம். என் அக்காவுக்கு சனியன் பிடிச்சி இருக்குன்னு நினைக்கிறேன். அதான் ஆவூனா சனியன்னு சொல்லி திட்றா. இப்படிப்பட்ட அக்காவைப் பார்த்தால் நீங்க திட்டுவிங்கதான?. ஆனால் , நான் ஒரு நாள் கூட அக்கா இல்லாம இருந்தது இல்ல. என் அக்கா என்னைத் திட்டினால் நானும் திட்டுவேன் . ஆனாலும் அக்காவை மறக்க மாட்டேன். என் அக்கா எனக்கு சிரிப்பும் காட்டுவாள்.

ஆனால் மூன்று நாட்கள் என் அக்கா என்னை தனியே விட்டுவிட்டு கேம்ப் போய்விட்டாள். என் அக்காவை விட்டு பிரிந்து இருக்க என்னால் முடியவில்லை. வீட்டில் இருவரும் பாடல் பாடிக்கொண்டு இருப்போம். என் அக்கா என்னைத் திட்டினாலும் இரவு எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள். ஆனால் அதற்கு மட்டும் என் அக்காவை பிடிக்கும் என்று சொல்லவில்லை.

எனக்கு என்னவென்றே தெரியவில்லை ஆனாலும் என் அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும் .

ஏங்கம்மா .....


இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது.
( 12.2.2006 )

தற்பொழுது ஏங்கம்மா உயிருடன் இல்லை என் பாட்டி மறைவு நாள் 14.11.2006

(இதுகூட நான் குறும்பு தனத்தோடு எழுதியது பாட்டியைப் பற்றி புரியாமல் எழுதியது . நான் எழுதியதை என் பாட்டி ரசித்து படித்து , அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார் )
ஏங்கம்மா என்பவர் ஒரு நியாயம் கேட்பவர் . தினாமும் என் வீட்டிற்கு வருவார். நான் இரவு ஆச்சி என்று சொல்லுவேன் . ஏன்னென்றால் அவர் வீட்டிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என்று நியாபகப்படுத்துவதற்காக. ஏன் என்றால் என் பாட்டி யாராவது நியாயம் பேச கூப்பிட்டால் உடனே சென்று விடுவார். அதுமட்டும் அல்லாமல் அவர் எங்களை குறை சொல்லுபவர் . என் வீட்டிற்கு வந்தால் டீ குடிப்பார் . டீ குடித்ததும் டம்ளர் கழுவமாட்டீர்களா என்று எங்களைத் திட்டுவார். என் அம்மாவையும் திட்டுவார் . மங்கை நீ புள்ள வளக்குறது சரி இல்ல . புள்ளைங்க இதுக்கூட செய்ய தெரியலன்னா என்ன புள்ள வளக்குற அப்படின்னு எங்க அம்மாவ திட்டுவாங்க .


தாத்தா தினமும் மார்க்கெட் போய் காய்கறியெல்லாம் வாங்கிட்டு வந்து பாட்டிக்கிட்ட குடுப்பாங்க . தாத்தா டீ போட்டு தருவார், சமைப்பார் . சனி , ஞாயிறு எற்கார்டு செல்வார் கல்லூரியில் பாடம் நடத்த . அந்த இரண்டு நாள் தான் தாத்தாக்கு நிம்மதி ( பாட்டி இறந்த பிறகு தாத்தா செல்வதில்லை )

தாத்தா எங்களைக் கொஞ்சுவார். அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் . ஏங்கம்மாவுக்கு குழந்தைகளை குறை சொல்ல தான் பிடிக்கும் அதுக்கு தான் தேவை இல்லாமல் எங்களைத் திட்டுவார் . எங்க அம்ம்மாவ திட்டினாக்கூட பரவால குழந்தைகளான எங்களைத் திட்டலாமா

ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரிகிறது என் பாட்டி நாங்கள் நல்ல பிள்ளைகளா உருவாகனும்னு தான் எங்கள திட்டி இருக்காங்கன்னு புரியுது

என் அம்மா .....


இது என் அம்மாவை பற்றி நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது.

எனக்கு என் அம்மா நான் போகும் டான்ஸ் கிளாஸ் , டியூஷன் ஆகியவற்றிற்கு பணம் கொடுப்பாங்க . சாயங்காலம் நான் வந்ததும் எனக்கு டீ வெச்சி குடுப்பாங்க. நான் வேண்டாம்னு சொன்னால் சரி போ சந்தோசம்னு சொல்லுவாங்க . இப்படிப்பட்ட அம்மாவை நீங்க எங்கயும் பார்க்க முடியாது. தான் மட்டும் சாப்பிட்டால் போதும் என்கிற அம்மாவை எங்கயாவது பார்த்து இருக்கீர்களா ?

இரவில் சாப்பாடு எனக்கு சாப்பாடு போடுவாங்க நான் வேண்டாம் என்றால் சரி போ சந்தோசம்னு சொல்லுவாங்க. காலைல நான் நான் ஸ்கூல்க்கு கிளம்பும்போது சாப்பாடு போடுவாங்க. நான் ஸ்கூல்க்கு ரெடி பண்ணிட்டு சாப்பிட உட்காருவேன் திடிர்னு எனக்கு சாப்பாடு வேண்டாம் டைம் ஆச்சின்னு சொல்லுவேன் . உடனே எப்பவும் போல அம்மா சரி சந்தோசம்ன்னு சொல்லுவாங்க

இதன்மூலம் என் அம்மா உங்கள் அம்மாவாக இருந்தால் அவளை நீங்கள் உங்கள் அம்மா என்று சொல்லுவீர்களா ? இருந்தாலும் இப்படிப்பட்ட அம்மாவை என்னால் மறக்கமுடியாது , அவள் இல்லாமல் என்னால் இருக்கவும் முடியாது .
தினமும் நான் செய்யும் அனைத்து செயல்களும் என் அம்மாவையே நியாபகப்படுத்தும்.


( இது நான் ஐந்தாவது படிக்கும் போது என் அம்மாவைப்பற்றி குறும்புத்தனத்தோடு எழுதியது )

தண்ணீருக்காக நான் தவித்த சோகக்கதை


காக்கா தண்ணீருக்காக அலஞ்ச கதைய நீங்க எல்லாரும் கேட்டு இருப்பிங்க . ஆனால், நான் தண்ணீருக்காக அலஞ்ச கதைய இதுவரை கேட்டு இருக்கமாட்டிங்க . சொல்றேன் ......... கேளுங்க


இது நான் ஐஞ்சாவது படிக்கும் போது நடந்தது ( 3.12.2005 ) . அன்னைக்கு காலைல ஸ்கூல்க்கு கெளம்பிட்டு இருந்தேன். வீட்ல வாட்டர் கேன் தேடி தேடி பார்த்தேன் எங்கயுமே இல்ல. அதனால நான் வசந்தி பாட்டி வீட்ல போய் வாட்டர் கேன் வாங்கிட்டு வந்தேன் . எங்க அக்கா எனக்கு வாட்டர் கேன்ல தண்ணீர் பிடிச்சி தந்தா. என் ஆட்டோ வந்துடுச்சி அவசரத்தில் நான் வாட்டர் கேனை விட்டுட்டு ஆட்டோல ஏறிட்டேன் .

காலைல எல்லா பிள்ளைங்கக்கிட்டையும் தண்ணி கேட்டேன் யாருமே தரல தெரியுமா . அஸ்வினி என்ற பிள்ளை மட்டும் கொஞ்சூண்டு தந்தா . காலைல இன்டர்வெல் பெல் அடிச்சது . அப்பவும் யாரும் எனக்கு தண்ணி தரல எல்லாரும் எனக்கு சாயங்காலம் வரைக்கும் வேண்ணும்னு சொல்லிட்டாங்க . மதியம் ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்தாங்க அதும் நான் எத்தன முறை கேட்டேன் தெரியுமா? அதுக்கு அப்புறம் தான் குடுத்தாங்க . மதியம் இண்டர்வேள்ளையும் யாரும் தரல .

மதியானத்துல இருந்து சாயங்காலம் வரைக்கும் நான் தண்ணி குடிக்கல . சாயங்காலம் டான்ஸ் கிளாஸ்ல பிரியான்னு ஒரு பிள்ளகிட்ட கொஞ்சூண்டு தண்ணீர் வாங்கினேன் . என்ன போல நீங்களும் வாட்டர் கேனை வீட்ல வெச்சிட்டு போய் கஷ்டப்படாதிங்க பிளஸ்

களப்பயணம்


நாங்கள் களப்பயணம் இன்று போகிறோம் என்று வகுப்பு ஆசிரியை சொன்னார். காலை தமிழ் பாடம் பாதி நடத்திவிட்டு எல்லோரும் ஒவ்வொரு பெஞ்சாகப் போய் சாப்பாட்டுப்பை எடுத்து வாங்க என்று சொன்னார். எல்லோரும் அசம்பளிக்கு நிக்கற மாதிரி நில்லுங்கள் என்று ஆசிரியர் சொன்னார். மூன்று பேராக நில்லுங்கள் என்று சொன்னார்.


அப்போது நான், ஹேமா, ப்ரியா மொன்று பேரும் நின்றுகொண்டோம் . எல்லோரும் வரிசையாக நடங்கள் என்று சொன்னார். அப்போது ஒரு மாணவி கிழே விழுந்துவிட்டாள், அதை பார்த்து நானும்,ஹேமாவும் சிரித்துக்கொண்டே நடந்தோம் . சிஸ்டர் ,டீச்சர் எல்லோரும் எங்களோடு களப்பயணம் வந்தார்கள் . சிஸ்டர் எங்ககிட்ட எல்லோரும் சந்தோசமா இருக்கீர்களா ? என்று கேட்டார். எல்லோரும் சந்தோசமா இருக்கோம் சிஸ்டர் என்று கோரசாக சொன்னோம் .


எல்லோரும் களப்பயண இடத்தை அடைந்தோம். நான் பிஸ்கட் கொண்டு போனேன் . நானும், ஹேமாவும் சிஸ்டர்க்கு சிறிது கொடுத்தோம் . பின் சிஸ்டர் எல்லோரும் போய் விளையாடுங்க என்று சொன்னார் .


திடீர்என்று இங்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நானும், ஹேமாவும் நினைக்கல. என்ன விளையாட்டு விளையாடுறதுன்னு எங்களுக்கு தெரில. நானும், ஹேமாவும், மோகன ப்ரியா என்றபொண்ணும் ஓடி பிடித்து விளையாண்டோம்.


போர் அடிச்சது. எனக்கும், ஹேமாக்கும் பசிச்சது எப்படா சாப்பாடு சாப்பிடுவோம் ,எப்படா பள்ளிக்கு போவோம் என்று இருந்தது . அப்ப எங்க நல்ல நேரம் சிஸ்டர் எல்லோரும் சாப்பிட வாங்க என்று கூப்பிட்டார் . அப்பாடா ....... என்று மூச்சிவிட்டோம் . சாப்பிட்டு விட்டு எல்லோரும் உட்காருங்கள் என்றார் .


யாருக்கு பாட்டு பாட தெரியுமோ? அவங்க எல்லாம் வாங்கன்னு கூப்பிட்டார். எல்லோரும் உட்கார்ந்தோம் . நான், ஹெமாகிட்ட ஏய்..... எனக்கு கஜினி படத்துல இருந்து சுட்டியும் விழி சுடரே பாட்டு தெரியும் என்று சொன்னேன். போய் பாடு. ப்ளீஸ் ப்ளீஸ்டி....... எனக்காக்க இதுகூட பண்ணமாட்டியா என்று சொன்னாள். வேற வழி இல்லாமல் சரி என்று நானும் போய் பாடினேன் .


சிஸ்டர் , '' செய்யுள மனப்பாடம் பண்ணலனாலும் பாட்ட மனப்பாடமா வெச்சி இருக்க '' என்று சொல்லி கைதட்டினார் . ஏய் ..... பார்த்தியா நான் சொனதால தான சிஸ்டர் உனக்கு கை தட்டினார் என்று சொன்னாள் ஹேமா. அவளுக்கு நன்றியை சொன்னேன் .


அப்புறம் எல்லோரும் சர்ச்க்கு போனோம். அப்போது ஹேமா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள் , நானும் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன் . அப்போது, சிஸ்டர் என்ன சத்தம்டி என்று கேட்டார். சாரி சிஸ்டர் இனிமேல் சத்தம் போடா மாட்டோம் என்று சொன்னோம் .


ஒவ்வொருவரும் வரிசையாக வந்தோம் அப்போதே சிரித்துக்கொண்டே வந்தோம் . மீண்டும் முதலில் கிழே விழுந்த அதே பெண்ணே மீண்டும் கிழே விழுந்தாள் அதனால் நாங்கள் மீண்டும் சிரித்துக்கொண்டே ஸ்கூல்க்கு வந்தோம் . அப்புறம் சிஸ்டர்க்கு நன்றி கூறினோம்


( இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது - 28.1.2006 )