வியாழன், 14 ஜனவரி, 2010

என் அக்கா


என் அக்கா 8.1.2006 - 10.1.2006 வரை கைடு கேம்ப் பொய் இருந்தாள் . அக்கா இல்லாமல் எட்டாம் தேதி அன்று நான் தூங்கவில்லை. அக்கா எப்போது வருவாள் என்று அம்மாவிடம் கேட்டேன் அம்மா 10 ஆம் தேதி அன்று வருவாள் என்று சொன்னாங்க. அக்கா இல்லாமல் சிறிது நேரம் கூட உறங்கவில்லை. எப்ப நான் தூங்கனேன்னு எனக்கு தெரில தூங்கிட்டேன் . அதே நேரம் என் அக்கா என்கூட இருந்தா உடனே தூங்கிடுவேன். என் அக்கா என்கூட இருந்தா அவள நோண்டிக்கிட்டே இருப்பேன். என் அக்கா என்னைத் திட்டுவதற்கு ஒரு வார்த்தைக் கண்டுபிடித்து இருந்தாள் . அது என்னன்னு சொல்றேன் கேளுங்க

ஒரு தடவை நான் அவளை நோண்டினால் ஏய் .. என்று சொல்லுவாள் . இரண்டாவது முறை நோண்டினால் ஏய் ................. என்று இழுப்பாள். மூன்றாவது முறை நோண்டினால் அம்மா பாருமா என்று தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை எழுப்புவாள். அதற்கு என் அம்மா நீ ஆச்சி , அவளாச்சி என்று கூறுவாள். இன்னொரு முறை நோண்டினால் ஏய் சனியனே .... என்று திட்டுவாள். எப்படியோ சண்ட போட்டுட்டே தூங்கிவிடுவோம். என் அக்காவுக்கு சனியன் பிடிச்சி இருக்குன்னு நினைக்கிறேன். அதான் ஆவூனா சனியன்னு சொல்லி திட்றா. இப்படிப்பட்ட அக்காவைப் பார்த்தால் நீங்க திட்டுவிங்கதான?. ஆனால் , நான் ஒரு நாள் கூட அக்கா இல்லாம இருந்தது இல்ல. என் அக்கா என்னைத் திட்டினால் நானும் திட்டுவேன் . ஆனாலும் அக்காவை மறக்க மாட்டேன். என் அக்கா எனக்கு சிரிப்பும் காட்டுவாள்.

ஆனால் மூன்று நாட்கள் என் அக்கா என்னை தனியே விட்டுவிட்டு கேம்ப் போய்விட்டாள். என் அக்காவை விட்டு பிரிந்து இருக்க என்னால் முடியவில்லை. வீட்டில் இருவரும் பாடல் பாடிக்கொண்டு இருப்போம். என் அக்கா என்னைத் திட்டினாலும் இரவு எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள். ஆனால் அதற்கு மட்டும் என் அக்காவை பிடிக்கும் என்று சொல்லவில்லை.

எனக்கு என்னவென்றே தெரியவில்லை ஆனாலும் என் அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும் .

3 கருத்துகள்:

  1. சொர்ணாவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ;எழுத்து நடை ஆரம்பமே நன்றாக இருக்கிறது. நல்ல எள்ளல் ...பெரிய பெண் எழுத்தாளர்களிடம் கூட இந்த எள்ளல் நடை இல்லை. நிறய்ய புத்த்கங்கள் கதைகள் வாசித்தால் இன்னும் எழுத்தும் படைப்பும் மெருகேறும் ...பெரிய எழுத்தாளினி ஆக மீண்டும் வாழ்த்துக்கள் ,,,

    பதிலளிநீக்கு
  2. கருத்துரை எழுதியதற்கு மிகவும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  3. அருமையான எழுது நடை,உங்களது எழுத்து நடை இன்னும் மெருகேற எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு