வியாழன், 14 ஜனவரி, 2010

களப்பயணம்


நாங்கள் களப்பயணம் இன்று போகிறோம் என்று வகுப்பு ஆசிரியை சொன்னார். காலை தமிழ் பாடம் பாதி நடத்திவிட்டு எல்லோரும் ஒவ்வொரு பெஞ்சாகப் போய் சாப்பாட்டுப்பை எடுத்து வாங்க என்று சொன்னார். எல்லோரும் அசம்பளிக்கு நிக்கற மாதிரி நில்லுங்கள் என்று ஆசிரியர் சொன்னார். மூன்று பேராக நில்லுங்கள் என்று சொன்னார்.


அப்போது நான், ஹேமா, ப்ரியா மொன்று பேரும் நின்றுகொண்டோம் . எல்லோரும் வரிசையாக நடங்கள் என்று சொன்னார். அப்போது ஒரு மாணவி கிழே விழுந்துவிட்டாள், அதை பார்த்து நானும்,ஹேமாவும் சிரித்துக்கொண்டே நடந்தோம் . சிஸ்டர் ,டீச்சர் எல்லோரும் எங்களோடு களப்பயணம் வந்தார்கள் . சிஸ்டர் எங்ககிட்ட எல்லோரும் சந்தோசமா இருக்கீர்களா ? என்று கேட்டார். எல்லோரும் சந்தோசமா இருக்கோம் சிஸ்டர் என்று கோரசாக சொன்னோம் .


எல்லோரும் களப்பயண இடத்தை அடைந்தோம். நான் பிஸ்கட் கொண்டு போனேன் . நானும், ஹேமாவும் சிஸ்டர்க்கு சிறிது கொடுத்தோம் . பின் சிஸ்டர் எல்லோரும் போய் விளையாடுங்க என்று சொன்னார் .


திடீர்என்று இங்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நானும், ஹேமாவும் நினைக்கல. என்ன விளையாட்டு விளையாடுறதுன்னு எங்களுக்கு தெரில. நானும், ஹேமாவும், மோகன ப்ரியா என்றபொண்ணும் ஓடி பிடித்து விளையாண்டோம்.


போர் அடிச்சது. எனக்கும், ஹேமாக்கும் பசிச்சது எப்படா சாப்பாடு சாப்பிடுவோம் ,எப்படா பள்ளிக்கு போவோம் என்று இருந்தது . அப்ப எங்க நல்ல நேரம் சிஸ்டர் எல்லோரும் சாப்பிட வாங்க என்று கூப்பிட்டார் . அப்பாடா ....... என்று மூச்சிவிட்டோம் . சாப்பிட்டு விட்டு எல்லோரும் உட்காருங்கள் என்றார் .


யாருக்கு பாட்டு பாட தெரியுமோ? அவங்க எல்லாம் வாங்கன்னு கூப்பிட்டார். எல்லோரும் உட்கார்ந்தோம் . நான், ஹெமாகிட்ட ஏய்..... எனக்கு கஜினி படத்துல இருந்து சுட்டியும் விழி சுடரே பாட்டு தெரியும் என்று சொன்னேன். போய் பாடு. ப்ளீஸ் ப்ளீஸ்டி....... எனக்காக்க இதுகூட பண்ணமாட்டியா என்று சொன்னாள். வேற வழி இல்லாமல் சரி என்று நானும் போய் பாடினேன் .


சிஸ்டர் , '' செய்யுள மனப்பாடம் பண்ணலனாலும் பாட்ட மனப்பாடமா வெச்சி இருக்க '' என்று சொல்லி கைதட்டினார் . ஏய் ..... பார்த்தியா நான் சொனதால தான சிஸ்டர் உனக்கு கை தட்டினார் என்று சொன்னாள் ஹேமா. அவளுக்கு நன்றியை சொன்னேன் .


அப்புறம் எல்லோரும் சர்ச்க்கு போனோம். அப்போது ஹேமா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள் , நானும் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன் . அப்போது, சிஸ்டர் என்ன சத்தம்டி என்று கேட்டார். சாரி சிஸ்டர் இனிமேல் சத்தம் போடா மாட்டோம் என்று சொன்னோம் .


ஒவ்வொருவரும் வரிசையாக வந்தோம் அப்போதே சிரித்துக்கொண்டே வந்தோம் . மீண்டும் முதலில் கிழே விழுந்த அதே பெண்ணே மீண்டும் கிழே விழுந்தாள் அதனால் நாங்கள் மீண்டும் சிரித்துக்கொண்டே ஸ்கூல்க்கு வந்தோம் . அப்புறம் சிஸ்டர்க்கு நன்றி கூறினோம்


( இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது - 28.1.2006 )

2 கருத்துகள்: